நாமக்கல்லில் முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ரூ.5.50 காசாக இருந்த முட்டை விலை ரூ.5.20 காசாக குறைந்துள்ளது.
நாமக்கல்லில் கடந்த வாரங்களில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.20 லிருந்து 15 காசுகள் உயர்த்தி ரூ.5.35ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இதனால் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உணவகங்களில் முட்டை சார்ந்த உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. சில்லறை வியாபாரங்களில் ஒரு முட்டையின் விலை ரூ.6 தாண்டி விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் நாமக்கல்லில் இன்று முட்டை விலை திடீரென சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 லிருந்து 30 காசுகள் குறைத்து ரூ.5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து நாமக்கலில் ஒரு முட்டையின் ரூ.5.20 ஆகவும், சென்னையில் ரூ.5.50 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வந்த முட்டையின் விலை சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







