முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் சுயமாக வருவாயினை பெருக்க சுற்றுலாவை வளர்ச்சியடைய வேண்டிய நிலை உள்ளது. மத்திய அரசிடம் அடிக்கடி நிதிக்கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கக்கூடாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்குவதற்கு ஏற்படும் காலத்தாமதால் பல திட்டங்கள் முடங்கும் நிலையில் உள்ளது. விதியை தளர்த்தினால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருவார்கள். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டாகி வருகின்றது. ஆனால் சிலவற்றில் முடிவெடுக்க தடங்கல் ஏற்படுவதால் வளர்ச்சியும், வருவாயும் பாதிக்கப்படுகின்றது.

முதலீடு செய்ய வருபவர்களுக்கு புதுச்சேரிக்கு வந்தால் உடனடியாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும். அந்த நிலையில் நாம் உள்ளோம் என்பதை தெரிவிக்கின்றேன். நான் புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்தமுடியவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்; குஜராத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

G SaravanaKumar

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை; 16 இலங்கைத் தமிழர்கள் விடுவிப்பு

Arivazhagan Chinnasamy

“திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும்”: மமதா பானர்ஜி

Halley Karthik