பரம்பிக்குளம் அணையில் தண்ணீர் வீணாவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் – அமைச்சர் துரைமுருகன்

பரம்பிக்குளம் அணையில் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகுவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.   பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2-வது மதகு…

பரம்பிக்குளம் அணையில் மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாகுவதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

 

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2-வது மதகு திடீரென உடைந்து, வினாடிக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகின்றது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் கேரளா பொதுப்பணித்துறையினர் குழுவாக இணைந்து உடைந்த மதகை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. இந்த அணை 72 அடி உயரம் கொண்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இந்த அணை தமிழ்நாடு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த பருவ மழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி இருந்தது.

இந்நிலையில், அணையின் 2-வது மதகு திடீரென உடைந்து, வினாடிக்கு சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் கேரளா பொதுப்பணித்துறையினர் குழுவாக இணைந்து உடைந்த மதகை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனிடையே, அணையில் உள்ள மதகு உடைந்து தண்ணீர் வீணாகுவது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வீணாகுவதை கண்டு கண்ணீர் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மதகு உடைந்தது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளில் உள்ள மதகுகளும் தொழில் நுட்ப ரீதியாக சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.