ஜோ பைடனின் பதவி காலம் வெற்றிக்கரமாக அமைய பிரார்த்திப்பதாக ட்ரம்ப் தனது கடைசி உரையில் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெளியான பிறகு, பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப்பின் உரையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கர்களின் அதிபராக சேவையாற்றியது வார்த்தைகளால் கூற முடியாத பெருமையை தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிபராக தாம் வந்த வேலையை சரியாக செய்துள்ளதாக கூறிய ட்ரம்ப், தமது ஆட்சிக்காலத்தின் சாதனைகளை பட்டியிட்டு கூறினார்.







