வடக்கு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வடக்கு சீனாவில் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் அங்குள்ள ஷிஜியாஷூவாங் பகுதியில் தனிமைப்படுத்துதல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், வேகவேகமாக முடிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட அறைகளுடன் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளன.







