கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா அதிகமான மக்கள் செல்லக்கூடிய பூங்காவாகும். இங்கு கண்ணை கவரும் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும்.
தற்போது மலர் படுகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது காஸ்மஸ் எனப்படும் ஐ லவ் யூ மலர்கள் பூங்காவில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
அனகா காளமேகன்







