தமிழ்நாடு ஆளுநர், பாஜக ஆளுநராக மாறியதால் மக்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதாக மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் தலைமைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் என்று சொல்லக்கூடாது, பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும் என விமர்சித்தார்.
அண்மைச் செய்தி: மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு; 500க்கும் மேற்பட்டோர் கைது
ஆளுநர் பாஜக ஆளுநராக மாறியதால்தான் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். மேலும், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 800 மெகாவாட் வராததாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ தெரிவித்தார்.
ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்கட்சி தலைவர் உட்பட பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








