‘மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ளோம், கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என அமித் ஷா பங்கேற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டி வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், கடந்த ஆட்சி காலத்தில் செய்ய முடியாத அனைத்தையும் எனது தலைமையிலான அரசு செய்து வருவதாக கூறினார். அதே போல் மத்திய அரசின் திட்டங்களை ஏராளம் நிறைவேற்றப்படுவதாகவும், 10,000 அரசு பணியிடங்களை நிரப்புவோம் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ
மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுள்ள்ளதாகவும், நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கைhttps://t.co/WciCN2AH8n | #Rangasamy | #Puducherry | #PuducherryGovt | @AmitShah | @BJP4India | #BJP | #News7Tamil pic.twitter.com/v9dtnigUhG
— News7 Tamil (@news7tamil) April 24, 2022
மேலும், மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் உதவியை பெற்று தருவேன் என்றும், அதே போன்று மாநில அந்தஸ்தும் பெற்றுத்தருவோன் என்றும் தெரிவித்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் இதற்கு ஏற்பாடு செய்து தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். அதேபோல மத்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







