முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

அரசியல்வாதியாக நான் பிறந்த ஊர் கோவை: கமல்ஹாசன்

எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு, கெம்பட்டி காலனி, செட்டி வீதி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதியாக தாம் பிறந்த ஊர், கோவை தெற்கு தொகுதிதான் என தெரிவித்தார். மத நல்லிணக்கத்திற்கு எதிராக நடக்ககூடிய சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டி, இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாக, அவர் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசியல்வாதிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதை காந்தியடிகள் எழுதி வைத்துள்ளதாகவும், அதைப்போன்று தாம் செயல்படுவேன் என்றும், கமல்ஹாசன் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அரசு ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தை போன்று ,தனியார் பள்ளி ஆசிரியர்களும் சம்பளம் பெற வேண்டும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

EZHILARASAN D

மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

Niruban Chakkaaravarthi

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Web Editor