“I AM THE Devil” – கேப்டன் மில்லர் டிரைலர் வெளியானது!

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில்…

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ்  மூர்,  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.  படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜனவரி 12 அன்று திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே, படத்தின் முன் வெளியீட்டு விழா ஜனவரி 3-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தனுஷ், பிரியங்கா மோகன், ஷிவ் ராஜ்குமார், சுதீப் கிஷன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், ஆங்கில பட நடிகர் எட்வர்ட், லிங்கா தனுஷ், யாத்ரா தனுஷ், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் டிரைலர் ஜன 06-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஜன 06) ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.