முக்கியச் செய்திகள் குற்றம்

’நான் ஊசியால் குத்தவில்லை’ – மகாலட்சுமி டீச்சர் விளக்கம்

போளூர் அருகே பள்ளி மாணவனின் முகத்திலிருந்த முகப்பருவைப் பள்ளி ஆசிரியை ஊசி மூலம் தவறுதலாக அகற்றியதால் முகம் வீங்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு என தகவல் வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நான் ஊசியால் குத்தவில்லை என ஆசிரியை மகாலட்சுமி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த நம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சேவத்தான்-செல்லம்மாள் தம்பதிக்கு, சுதா, அசோக், அஜித், சிவகாசி, சுஹாசினி என 5 குழந்தைகள் உள்ளனர். அதில், தனது மகன் சிவகாசியை ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசவெளி அரசு வன மேல்நிலைப் பள்ளியில், தங்கிப் படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி அன்று அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி சிவகாசியின் பெற்றோருக்குத் தொடர்புகொண்டு தங்களின் மகனுக்கு முகம் வீங்கி காணப்படுவதாகவும், உடனடியாக வந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து செவத்தான் தன் மகனை அழைத்து வரச் சென்ற போது முகம் அனைத்தும் வீங்கி இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதனை அடுத்து தன் மகனை நம்பியந்தல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அந்த மானவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவனின் உடல் மேலும் மோசமானதால் வேலூர் பிரபல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் மாணவனை பரிசோதத்தில் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது’

இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் தன் மகன் இறப்பிற்குக் காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜமுனாமரத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் மருத்துவ பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த உடனே மாணவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என ஜமுனாமுத்தூர் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஆசிரியை மகாலட்சுமி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் எனது குழந்தை, மாணவன் சிவகாசி முகத்தில் நான் ஊசியால் குத்தவில்லை. எனது குழந்தையின் இறப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என அவர் அப்போது தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ளது: காவல்துறை

EZHILARASAN D

ராகுல் காந்தி தகுதி நீக்கம்; டெல்லியில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்!

Jayasheeba

சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்

Arivazhagan Chinnasamy