பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் செல்கிறேன்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்றுடன் நடைபயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை…

தமிழகத்தில் இன்றுடன் நடைபயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்வதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி எம்பி, தேதி வரை 3 நாட்களில் 38கி.மீ / 3,570கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முழகு மூடு, சாமியார் மடம், சிராயன்குழி, மார்த்தாண்டத்தில் உணவு இடைவேளை விடப்படும்.

இன்று மாலை மார்த்தாண்டம் முதல் குழித்துறை, களியக்காவிளை வழியாக பாறசாலையில் இன்று இரவு ஓய்வு எடுக்கறார். தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு கேரளா செல்லும் ராகுல் காந்தி நாளை முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நடைபயணத்தை முடித்த பிறகு பொதுமக்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நடைபயணத்திற்கு வரவேற்பு கொடுத்த மக்களுக்கு எனது நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி, மதம் என பிரித்து மக்களை பிரித்து கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட சிலருக்கு வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு அநீதி அளித்து வருகின்றனர். ஒரு இந்தியர் மற்ற இந்தியரை ஒதுக்க வேண்டும், நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றனர். தமிழ் மக்களிடம் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. நான் பெரியார் மண்ணை விட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கிறேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.