வெளியாகியுள்ள சில படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
ஆகாஷ் பிரேம் குமார், புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘கடைசி காதல் கதை’. ஆர்.கே.வித்யாதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ் க்யூப் நிறுவனம் சார்பில் இ.மோகன் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (09.12.21) நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ‘சமீபத்தில் வெளியான சில படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது’ என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் மேலும் கூறும்போது, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி, அவரின் மனைவி உள்ளிட்டோருக்காக வருந்துகிறேன். கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது வெளியாகியுள்ள சில படங் களைப் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொதுநல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது’ என்றார்.
படத்தின் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் பேசும்போது, ’இந்த படத்தை 19 நாட்களில் எடுத்திருக்கிறேன். இதில், ஜாதி, மதம், பெண்களின் பிரச்னை அனைத்தும் சர்ச்சைக்குரிய தாக இருக்கும். படத்தின் ஹீரோ பாலா இயக்கிய ’வர்மா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்தவர். இந்த படத்தின் இசையமைப்பாளர் சேத்தன் கிருஷ்ணா கன்னடத்தில் 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். படத்தை விரைவில் வெளியிட உள்ளோம்’ என்றார்.