முக்கியச் செய்திகள் உலகம்

’2008 ஆம் வருஷத்துக்கு பிறகு பிறந்தா சிகரெட் இல்லை’: நியூசி. புதுச்சட்டம்

நியூசிலாந்தில் இளைய தலைமுறையினா் சிகரெட்டுகள் வாங்குவதற்குத் தடை விதிக்க அந்த நாடு புதிய சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. 

சிகரெட் மற்றும் புகையிலையை பயன்படுத்துவதால் உலகம் முழுவதும், வருடத்துக்கு 80 லட்சம் பேர்உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இதை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள், உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகள் அந்தப் பொருட்களை விற்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில், இளம் தலைமுறையினர் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வர, புதிய சட்டம் ஒன்றை அடுத்த வருடம் கொண்டு வர இருக்கிறது நியூசிலாந்து. அதன்படி, 14 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு சிகரெட் மற்றும் புகையிலப் பொருட்களை விற்பது தடை செய்யப்பட இருக்கிறது.

இந்த வயது வரம்பை ஆண்டுக்கு ஆண்டு உயா்த்தவும் அந்தச் சட்டம் வழி வகை செய்ய இருக்கிறது. இந்தச் சட்டத்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் அடியோடு ஒழிந்துவிடாது என்றாலும் அந்தப் பழக்கம் ஒவ்வொரு வருடமும் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் கூறும்போது, ‘இளம் தலைமுறையினர் ஒரு போதும் புகைப்பிடிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து:முதல்வர்!

பிரபல வீடியோ செயலி மோஜ்-க்கு ஒரு வயது

Gayathri Venkatesan

தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது; ஜோதிமணி எம்.பி

Ezhilarasan