பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபரில் வெளியாகும் ‘வேட்டையன்’!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின் 170தாவது படத்தை…

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின் 170தாவது படத்தை ஜெய்பீம் பட  இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’  திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி,  பகத் பாசில் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

https://twitter.com/LycaProductions/status/1776920414658429024

‘வேட்டையன்’ திரைப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தூத்துக்குடி, சென்னை, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.