ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் ஒன்று கூடி, தலிபான்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால், உடனடியாக சம்பளம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி தலிபான்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லை என்று முறையிட்டனர். இது தொடர்பாக பேசிய ஆசிரியர் சங்க தலைவர் முகமது சபீர் மஷால்“ அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. வீட்டு உபயோக பொருட்களை விற்றுத்தான் தங்கள் செலவுகளை பார்த்துகொள்கிறார்கள்.
மின் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். இந்த கூடுகையில் சுமார் 18,000 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் பத்தாயிரத்திற்கும் மேல் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது. தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றதலிருந்து ஆப்கனில் பெண்கள் கல்விகற்க தடை, விருப்பமான உடை அணிய தடை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மேலும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆப்கன் குழந்தைகள் பாதிக்கப்பட்டிள்ளனர் என்ற தகவலும் முன்பு வெளியாகி இருந்தது.







