ரத்து செய்யப்பட்ட இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தான பிறகு, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்தத் தொடரில் முன்னிலை வகித்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் மாதம் நடக்க இருந்தது.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பிசியோதெரபிஸ்ட் யோகேஷூக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா அச்சம் காரணமாக கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது.
The fifth match of our Men's LV= Insurance Test Series against India has been rescheduled and will now take place in July 2022.
— England Cricket (@englandcricket) October 22, 2021
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட அந்த டெஸ்ட் போட்டியை அடுத்த வருடம் ஜூலை மாதம் நடத்த இந்திய மற்றும் இங்கிலாது கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்துள்ளன. இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.








