மனிதர்களின் மூளையில் 0.5% #Microplastics துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மனிதர்களின் மூளையில் 0.5% மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டது. மனிதர்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு மற்றும் நம் உடலின் உறுப்புகள் கூட பிளாஸ்டிக்கால் மாசுபட்டுள்ளன.…

மனிதர்களின் மூளையில் 0.5% மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டது.

மனிதர்கள் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு மற்றும் நம் உடலின் உறுப்புகள் கூட பிளாஸ்டிக்கால் மாசுபட்டுள்ளன. குறிப்பாக, 5 மிமீ விட்டம் கொண்ட மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் நுழைந்து கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! #Doddabetta செல்ல நாளை முதல் அனுமதி!

இது தொடர்பாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மூளை மாதிரிகளில் 0.5% பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மனிதரின் உடல் ஆரோக்கியத்திற்கு பிளாஸ்டிக் பயன்பாடு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, Cukurova பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Sedat Gundogdu உட்பட பல நிபுணர்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள உலகளாவிய அவசரநிலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.