இணையவழி பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்: அமைச்சர் மனோ தங்கராஜ்

இணைய வழி பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை தியாகராயா் நகா் பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத்தில்…

இணைய வழி பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை தியாகராயா் நகா் பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கத்தில் இன்று ஆய்வு நடத்தினார். அப்போது மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் அதற்கு பெறப்படும் அடையாள அட்டை நகல்களை ஆய்வு செய்தாா். மாதாந்திர பால் அட்டை வினியோகத்தை எளிமைப்படுத்த வேண்டும் என ஆவின் ஊழியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இணைய வழி பால் அட்டை விற்பனையை  ஊக்கப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் அமைச்சர்  வழங்கினாா்.
முன்னதாக வாடிக்கையாளர்களிடம் ஆவின் பால் ,  உப பொருள்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் நுகா்வோரிடம் அலைபேசி மூலம் தொடா்பு கொண்டு பால் அட்டை புதுப்பித்தல் தொடா்பான விவரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ்  கேட்டறிந்தாா்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.