பால்வெளி மண்டலத்தில் நடக்கும் காலநிலை மாறுபாடுகளால் மிகப்பெரிய கோளான சனி கிரகத்தின் வண்ணம் மாற்றமடைந்து வருவதை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹப்பல் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.
பிரபஞ்சத்தின் பால்வெளி மண்டலத்தில் நடக்கும் சில மாறுபாடுகளை நாம் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கிறோம். நம் கண்களால் காண முடியாத பல மாற்றங்களைச் சிறந்த சில தொலைநோக்கியின் உதவியால் மட்டுமே காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நிகழ்வினை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஹப்பல் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2018-ம் ஆண்டுமுதல் 2020-ம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் சனி கிரகத்தின் நிறம், பருவநிலை மாறுபாடுகளால் மாற்றமடைந்து வருகிறது. மாற்றம் என்று பார்க்கும் பொழுது மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறிய அளவிலான மாற்றமாகவே உள்ளது.இதுகுறித்து பேசிய நாசாவை சேர்ந்த விஞ்ஞானி அமி சிமோன், “சனி கிரகத்தில் நடந்து வரும் வருடாந்திர வண்ண மாறுபாடுகளைப் பார்ப்பாதற்கு மிகவும் வியப்பாக உள்ளது” என்றார்.

மேலும் கடந்த 2004-2009 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் சனி கிரகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 1,300 கிலோமீட்டராக இருந்து வந்தது. இந்த நிலை கடந்த 2018-ம் ஆண்டில் காற்றின் வேகம் 1,600 கிலோமீட்டராக உயர்ந்துள்ளது. உயர்ந்து வரும் இந்த காற்றின் வேகம் வரும் காளங்களில் குறைய வாய்ப்புள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இதுபோன்று காற்றின் வேகம் மாறுதல் போன்ற காலநிலை மாற்றங்களால் சனி கிரகத்தின் நிறம் மாற்றமடைந்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த வண்ண மாறுபாடுகள் மிகப்பெரும் வியப்பையும் விஞ்ஞானிகளின் மத்தியில் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
