செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் சுற்றிவரும் விண்கலத்தை இயக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி!

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.300 கோடியை நாசா…

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.300 கோடியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செலவிட்டுள்ளது. இத்தனை சிறப்பு மிக்க விண்கலத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி சஞ்சீவ் குப்தா இயக்கி வருவது நம் நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “கலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் நான் இருந்து என் ஆய்வை தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா ஊரடங்கால் தற்போது லண்டனில் என் ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். என் இல்லத்தை தற்போது ஆய்வகமாக மாற்றியுள்ளேன். இந்த ஆய்வகத்தை காட்டிலும் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வகம் மூன்று மடங்கு பெரியது. என்னை போல பல விஞ்ஞானிகள் அங்கு வேலையில் மூழ்கியிருப்பர்” என்று தெரிவித்தார்.

தற்போது செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் விண்கலம் 2030ஆம் ஆண்டு பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1043 கிலோ எடை கொண்ட ரோவர், பல்வேறு மாதிரிகளை சேகரித்து வருகிறது. அது பூமி வந்தடைந்தவுடன் சஞ்சீவ் குப்தா அந்த மாதிரிகளை ஆய்வு மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா இல்லையா என்பதை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.