லியோ படம் எப்படி உள்ளது? இணையத்தில் வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத் பதிவு!

லியோ படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள்…

லியோ படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் படத்திற்கான முன்பதிவு புதிய சாதனை படைத்துள்ளது.

https://twitter.com/anirudhofficial/status/1711367982428168505

இதனைத்தொடரந்து அண்மையில் வெளியான லியோ திரைப்பட டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 4.4 கோடி பார்வைகளைக் கடந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் லியோ திரைப்படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலு “லியோ என பதிவிட்டு நெருப்பு, கோப்பை உள்ளிட்ட எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். அதாவது லியோ படத்துக்கான பின்னணி இசைகளை அனிருத் முடித்துவிட்டு படத்தினையும் பார்த்துவிட்டதாக அனிருத் அந்த பதிவில் தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.