நமது நாட்டில் நீங்கள் சைவமா அல்லது அசைவமா? என்ற கேள்வி இயல்பாகவே இருக்கும். பலர் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். சிலர் அசைவ உணவை விரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு தான். வாரத்தில் ஒரு நாள் மட்டும் பலர் அசைவம் சாப்பிடுவார்கள்.
இந்நிலையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தகவல்படி, முன்பைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் நமது நாட்டில் அசைவம் சாப்பிடுவது தெரியவந்துள்ளது. 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயது முதல் 49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு பங்கினர் அசைவத்தை சாப்பிட்டதே இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீன், சிக்கன், இறைச்சி ஆகியவை ஆய்வுப் பட்டியலில் இருந்தது. 2019 முதல் 2021 வரையிலான ஆய்வில் 16.6 சதவீதத்தினர் அசைவம் சாப்பிட மாட்டோம் என்று அறிவித்தனர். 2015 முதல் 2016 வரை எடுக்கப்பட்ட ஆய்வில் 21.6 சதவீதம் பேராக இருந்தது.
2019-2021 காலகட்டத்தில் 15 வயது முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 29.4 சதவீதம் பேர் மீன், சிக்கன் மற்றும் இறைச்சியை உட்கொண்டதில்லை என்று தெரியவந்துள்ளது. 2015-2016 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 29.9 சதவீதமாக இருந்தது.
இவ்வாறாக, 15 முதல் 49 வயதுக்குள்பட்ட 83.4 சதவீத ஆண்களும், இதே வயதுடைய 70.6 சதவீத பெண்களும் அசைவ உணவுகளை தினமும், வாரமும் அல்லது எப்போதாவது சாப்பிட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக இந்த ஆய்வு ஒரே ஆண்டில் முடிவுக்கு வரும். ஆனால், கொரோனா காரணமாக இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.