Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? எடப்பாடி பழனிசாமி!

நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர், நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என “ஷோ” காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.
இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்,

சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு,
படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு,
விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள்,

என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா? முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார்.

இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில்,
எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?

புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026 அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.