இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பெறுவது எப்படி?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் பெறுவது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி…

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் பெறுவது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 13ம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்கப்பட உள்ளது.

வரும் 13ம் தேதி முதல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை PAYTM செயலி மற்றும் http://www.insider.in என்ற வலைதள பக்கத்தில் காலை முதல் தொடங்கப்படும். நேரடியாக டிக்கெட்டுகளை பெற விரும்புவோர் வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல், சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த போட்டிக்கான அடிப்படை டிக்கெட் விலை ரூ.1,200 முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது C, D, E, லோயர் டிக்கெட்டுகள் விற்பனையானது வரும் 18ம் தேதி நேரடியாக எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. மீதமுள்ள டிக்கெட்டுகள் 13ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

I/J/K Lower – 3,000
I/J/K Upper – 1,500
C/D/E A/C Hospitality Box – 5,000
I/J Hospitality Box – 6,000
G Hospitality Box – 10,000
F/H Hospitality Box – 8,000
F Lower Hospitality Box – 5,000

பார்க்கிங் வசதிக்காக பட்டாபிராமன் கேட் அருகில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம், ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம், கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான பார்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கான விதிமுறைகள்:

  • பார்வையாளர்கள் மொபைல் போன் தவிர, மின்சாதன உபகரணங்கள், கேமரா, லேப்டாப், டேப்லெட், டிரோன்கள், பவர் பேங்க் உள்ளிட்டவை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஹெல்மெட், லேப்டாப் பேக், குடை உள்ளிட்டவைகளை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • பார்க்கிங் வசதிக்காக சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் அருகே உள்ள, சென்னை கலைவாணர் அரங்கம், பொதுப்பணித்துறை அலுவலகம், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம் என நான்கு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • புகைப்பிடிப்பது, மது அருந்துவது, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட சாதனங்கள் மைதானத்திற்குள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  • போட்டி நாளான 22ம் தேதி காலை 11.30 மணியளவில் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பார்வையாளர்கள் ஒரு முறை உள்ளே நுழைந்த பின்னர் வெளியேறினால், மீண்டும் மைதானத்தின் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • உணவு பொருட்கள் மைதானத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மைதானத்திற்கு செல்லப்பிராணிகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.