நாஸா மற்றும் இஸ்ரோ இணைந்து அமெரிக்காவில் உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை ஒப்படைத்தது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அதன் ட்விட்டா் பதிவில், கலிஃபோா்னியாவில் உள்ள நாஸாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 2,800 கிலோ எடைகொண்ட ‘நாஸா-இஸ்ரோ சிந்தடிக் அபொ்ட்சா் ரேடாா் (நிஸாா்)’ செயற்கைக்கோள் அமெரிக்க விமானப் படையின் சி-17 விமானம் மூலமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், இஸ்ரோவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி; பிரதமர் மோடியுடன் கண்டுகளித்த ஆஸ்திரேலிய பிரதமர்
நிஸார் செயற்கைக்கோளில் உள்ள ரேடாா் மூலமாக பூமியின் நிலம் மற்றும் பனிப் பரப்பை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். அதன்படி, வேளாண் பரப்பு அளவீடு செய்தல் மற்றும் நிலநடுக்கம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கணித்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ பயன்படுத்தவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா