முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்துக்களின்றி பட்டாசுகளை எப்படி வெடிப்பது?

தீபாவளி பண்டிகையான இன்று பட்டாசுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே பட்டாசுகளை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது.

குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது அவர்களின் பாதுகாப்பு கருதி பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்துவது சட்டவிரோமானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணிவரை அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் கட்டடங்களுக்கு கீழே நின்று பட்டாசு வெடிப்பது ஆபத்தானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை கையில் வெடிப்பதும் வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்றவைக்க முயற்சி செய்ய கூடாது, கம்பி மத்தாப்பு வெடிக்காத வெடி போன்றவற்றை அணைக்க தண்ணீரை அருகிலேயே வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் பாதைகள் மற்றும் வீடுகளுக்குள்ளாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, கைகளில் வைத்து கொளுத்தக் கூடாது, வெடித்தபின், அதை வாளித்தண்ணீரில் நனைக்க வேண்டும் என்பது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கூறப்படுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை இன்று வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி!

Jayapriya

பாகிஸ்தானில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் சிலை தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்

Gayathri Venkatesan

தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்

Saravana Kumar