முக்கியச் செய்திகள் இந்தியா

தேசிய விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தேசிய விளையாட்டு விருதுகள் 2022 க்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச்
சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 20ம் தேதி என விளையாட்டு அமைச்சகம் கடந்த சனிக்கிழமை நிர்ணயித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கும் அறிவிப்பு www.yas.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்திய ஒலிம்பிக் சங்கம் / இந்திய விளையாட்டு ஆணையம் / அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் / விளையாட்டு ஊக்குவிப்பு வாரியங்கள் / மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவை அதற்கேற்ப தெரிவிக்கப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல், பிரத்யேக போர்டல் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருது வழிகாட்டுதல்களின்படி தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரிகள் /நபர்களின் பரிந்துரையின்றி, ஆன்லைனில் dbtyas-sports.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே சுயமாக விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். “விருதுக்கான தகுதியான விளையாட்டு வீரர்களின்
விண்ணப்பம் வரும் செப்டம்பர் 20ம் தேதி இரவு 11.59 மணிக்குள் dbtyas-sports.gov.in என்ற போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது” என்று அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது நான்கு வருட காலப்பகுதியில் விளையாட்டுத் துறையில் ஒரு விளையாட்டு வீரரின்
கண்கவர் மற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அர்ஜுனா விருது நான்கு ஆண்டுகளாக நிலையான சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

துரோணாச்சார்யா விருது மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கம் வென்றவர்களை உருவாக்குவதற்காக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே சமயம் தியான் சந்த் விருது விளையாட்டு வளர்ச்சிக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.

ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சஹான் புரஸ்கார், விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் (MAKA) டிராபி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டிற்காக ஒரு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பின் விளிம்பில் இந்த முறை விருது பெறுபவர்கள் மற்றும் அங்கீகரிக்கப் பட உள்ளவர்களை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்யும் பொருட்டு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சாதிக்க தூண்டும் விதையை விதிக்கும் தருணம் கூடிய விரைவில் அரங்கேற உள்ளது.

– நந்தா நகாராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெருகும் திருமண மோசடிகள் – காவல்துறை வழங்கும் அறிவுரைகள் என்னென்ன?

EZHILARASAN D

ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நோயாளி

Janani

அக்னிபாத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது – அர்ஜுன் சம்பத்

EZHILARASAN D