ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை வார்த்தைகள் பேசுகிறான் என்பது குறித்த சுவாரசியமான தகவலை இந்த பதிவில் காண்போம்.
நாம் ஒவ்வொருவரும் தினமும் சராசரியாக எத்தனை வார்த்தைகள் பேசுகிறோம் என்று சிந்தித்ததுண்டா? நாம் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் அதிகம் பேசுவார்கள், ஒரு சிலர் குறைவாக பேசுவார்கள். இதை அடிப்படையாக கொண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர், நடிகர் மற்றும் ஒளிபரப்பாளர் கைல்ஸ் பிரான்ட்ரீத், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 860,341,500 வார்த்தைகள் பேசுகிறான் என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கைல்ஸ் பிரான்ட்ரீத், தி ஜாய் ஆப் லெஸ்: 860,341,500 வார்த்தைகளுடன் எப்படி கேளிக்கை செய்வது என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில், கைல்ஸ் தனது வாழ்நாளில் சராசரியாக 860,341,500 வார்த்தைகளை ஒரு மனிதன் பேசுகிறான் என்று எழுதியுள்ளார். மேலும் 860.3 மில்லியன் சொற்கள், 20-தொகுதி ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் முழு உரைக்கு 14 மடங்குக்கு சமம் என்றும் 32-தொகுதிகள் கொண்ட பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தின் 19.5 மடங்குக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.
லிங்க்ட்இன் கற்றல் பயிற்றுவிப்பாளர் ஜெஃப் ஆன்செல் கருத்துப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7000 வார்த்தைகள் பேச முடியும் என்று தெரிவித்துள்ளார். உலகின் அதிவேக பேச்சாளர் ஜான் மோசிட்டா ஜூனியர் என்பவர் ஒரு நிமிடத்தில் 583 வார்த்தைகள் பேசக்கூடியவர். பிரிட்டிஷ் உளவியலாளர் டாக்டர் நிக்கோலஸ் எல்மரின் கூற்றுப்படி, 80 சதவீத மக்களின் பேசும் வார்த்தைகளில், 20 சதவீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் 60 சதவிகிதம் நேரங்களில் நாம் நம்மைப் பற்றியே அதிகம் பேசுகிறோம் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்