தண்டட்டி தென்னிந்தியப் பண்பாட்டில், குறிப்பாகத் தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த அணிகலன்கள் அணியப்படுவதில்லை எனினும் வயதான சிலர் இன்னும் இதை அணிந்து கொண்டிருக்கின்றனர். ரைட்டு இந்த அணிகலனுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தானே கேட்கிறீங்க. இருக்குங்க சம்பந்தம் இருக்கு. பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, தீபா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கும் தண்டட்டிக்கும் என்ன தொடர்பு… அததான் இந்த ரிவ்யூவ்ல பார்க்க போறோம்.
படத்தின் கதை
தண்டட்டி அணிந்திருக்கும் ரோகிணி வெகு சிறு வயதிலேயே கணவனை இழக்கிறாள். அதனால் தனக்கு பிறந்த தீபா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட 6 குழந்தைகளை தனிஒருத்தியாக வளர்த்து திருமணமும் செய்து கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் ரோகிணியை காணவில்லை. காணமல் போன ரோகிணியை கண்டுபிடிப்பதற்காக இன்னும் சில நாட்களில் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற போகும் பசுபதி தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபடுகிறார். ரோகிணி காணாமல் போனதற்கும் தண்டட்டிக்கும் என்ன சம்பந்தம்? பசுபதி ரோகிணியை கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தின் காட்சிகள் முழுவதும் இயற்கை அழகை கொஞ்சும் தேனி மாவட்டம் அதனை ஒட்டியுள்ள கிரமங்கள் இடம்பெற்றிருக்கின்றது. கிரமங்களில் பேசப்படும் தமிழ் ரசிக்க வைக்கிறது. ஆனால் காமெடி என்று எடுத்திருக்கும் காட்சிகள் எல்லாம் சொதப்பல். கொஞ்சம் கூட சிரிக்கல தியேட்டரே ஒரே அமைதி. ரோகிணி மற்றும் பசுபதியின் நடிப்பு அட்டகாசம். இருந்தாலும் செண்டிமெண்ட் என்று வைத்திருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை நெருங்கவில்லை. படத்தில் flow ரொம்ப மிஸ் ஆகியிருக்கு.
வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வயதானவர்களுக்கு தேவையான ஒன்று அன்பு அதை கொடுத்தால் போதும். மொத்தத்தில் காசுக்காக அவர்களை தேடாதீர்கள் அன்பால் தேடுங்கள் என்பதை படம் எடுத்துரைக்கிறது.
தண்டட்டி காதுல இன்னும் இருக்கமா இருந்திருக்கலாம்








