சென்னையில் இருந்து மும்பை சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த லோக்மானிக் விரைவு ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, பேஷன் பிரிட்ஜ் சந்திப்பை கடக்கும் பொழுது ரயலின் முன் பகுதியில் இருந்த குளிர்சாதன பெட்டியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
திடீரென வந்த புகையினால் ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்கு எல்லாம் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதையடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். ரயில்வே துறையினர் திடீரென ஏற்பட்ட தீயினை விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை வெளியேறியது எனவும், உடனடியாக ரயில்வே ஊழியர்கள் சரி செய்து தற்போது ரயில் அங்கிருந்து புறப்பட்டது, இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.







