45 நாட்களில் எப்படி சம்பா சாகுபடி செய்ய முடியும்? – எடப்பாடி பழனிசாமி!

போதைபொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கவேன் என அறிக்கை விட்டால் பத்தாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திருப்பரங்குன்ற விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வந்தவுடன் தான் முழுமையான கருத்து சொல்ல முடியும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் சிறுமிகள் மாயமாகின்றனர். சரியான நடவடிக்கை எடுப்பத்தில்லை இந்த அரசு. தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு போதைப்பொருள் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கண்டுபிடிக்கவில்லை. தமிழக காவல்துறை உளவு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. போதைபொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கவேன் என அறிக்கை விட்டால் பத்தாது. போதைப்பொருள் விவகாரத்தில் போதைப்பொருளை கட்டுபடுத்த அரசு தவறிவிட்டது. மாதவரத்தில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யபட்டது. மத்திய அரசின் டி.ஆர்.ஐ அதிகாரிகள் போதைபொருளை கண்டறிந்துள்ளனர். மாவட்ட ஆட்சி தலைவருக்கே இப்படியென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.

தவெக நிர்வாகிகளிடத்தில் ஒரு ஒற்றுமை இல்லை. அடவாடித்தனமாக அரசாங்கத்தை பார்க்கிறோம். எதுவுமே வாய்திறக்க மாட்டேங்கிறார் முதலமைச்சர். அமைச்சர்களே இதுபோன்று நடந்து கொண்டால் சாதாரண மக்களின் நிலை என்ன. 45 நாட்களை வைத்து கொண்டு எப்படி சம்பா சாகுபடி செய்ய முடியும்.
ஒன்றும் தெரியாத முதலமைச்சர் மேட்டூர் அணையை திறத்து விட்டிருக்கிறார். சம்பாசாகுபாடிக்க தண்ணீர் ஜனவரி வரை திறந்துவிட வேண்டும். இந்த அரசு நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை முழுமையாக பெறவில்லை. கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்கள் தவறான தகவல்களை சொல்கின்றனர். அறிவிக்கப்பட்ட நீரை கூட கர்நாடக அரசு தடுக்க மறுக்கிறது. எந்தவித கோரிக்கையும் வைக்கமாகமல் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார்

முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றியும், விவசாய மக்கள் பற்றியும் கவலை இல்லை. 41 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். இப்படி இருந்தால் ஆட்சி தானாக கவுந்துவிடும். யாரும் கவிழ்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஆட்சியில் நிர்வாகமே கிடையாது. 20 ரூபாயில் ஊழல் நடந்திருக்கிறது என்றால் 37 ரூபாயில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும். ஒரு கட்சி இருக்கும் போது வெளியில் சென்று தனி கட்சி ஆர்ம்பித்து தேர்தலை சந்தித்து வருகின்றனர். அதனால் பிரிந்து சென்றவர்கள் என போடவேண்டாம். திமுகவிலிருந்து சென்று வைகோ கட்சி தொடங்கினார். நாம் பிரிந்து சென்றவர் என கூற முடியுமா? இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர் தான் எஸ்.பி் வேலுமணி. அவர் பேசுகிறார் என கூறி கேட்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.