புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு…

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு அரசின் வடிசாராய ஆலையில் இருந்து தேவையான அளவு சாராயம் சப்ளை செய்யப்படுகிறது.

வில்லியனூர் ஆரியப்பாளையம் பகுதி வடிசாராய ஆலையில் சாராயம் தயாரிக்கப்படவில்லை என்ற போதிலும், வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராயம் கொள்முதல் செய்யப்பட்டு, குடிப்பதற்கு உகந்ததாக மாற்றும் பணியை இந்த ஆலை செய்து வருகிறது. கள்ளச்சந்தையில் சாராயம் விற்கப்படுவதை தடுக்க, சீலிடப்பட்ட பேரல்கள் மற்றும் பாட்டில்களில் மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் : கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

தமிழ்நாட்டில் அரசு சார்பில் மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதும், தடையை மீறி கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.