“பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படும்“ – அமைச்சர் அன்பரசன்

பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.கே.ராதநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.கே.ராதநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்தேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி 1970ம் ஆண்டு சென்னையில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்ட அடித்தளமிட்டார். தற்போது சிதிலமடைந்த வீடுகளை புனரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சிதிலமடைந்த வீடுகளை இடித்து அதே இடத்தில் வீடுகளை கட்டுத்தர முதல்வரிடம் பரிந்துரைக்க உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்பட உள்ளது. பூர்வ குடிகளை அகற்றவில்லை, அருகாமையிலே வீடுகள் வழங்கி உள்ளோம். புதிதாக கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் அடுக்கு மாடிகளை அதிகரித்து ஆக்கிரமிப்பில் இருப்பவர்களுக்கும் வீடு வழங்கப்படும். இதுவரை 22 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கான தேவை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளவர்களுக்கு போதுமான தண்ணீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.