முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இணையத்தை கலக்கும் சைக்கிள் பயணம்


வசந்தன்

மலையை சாணை பிடிக்க செல்லும் வடிவேலுவின் பயணத்திற்கு பிறகு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது மற்றொரு சைக்கிள் பயணம்

சமூக வலைத்தளங்களில் நம்மை அதிகமாக கவர்ந்த விஷயம் மீம்ஸ் ஆகதான் இருக்கும். அந்த வகையில், இப்போது சோஷியல் மீடியாக்களில் டாப் ட்ரண்டிங்கில் இருப்பது எந்த மீம்ஸ் தெரியுமா? கபிலன் ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்துச்செல்லும் காட்சி தான். இதனை வைத்து வகைவகையாக மீம்ஸ்கள் உருவாக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் உட்கார வைத்து கபிலன் வீலிங் செய்வது, சுட்டிக் குழந்தைகளின் சைக்கிளில் ஒரு ரைடு போகலாம் என ரங்கன் வாத்தியாரை கபிலன் அழைப்பது, சிறு வயதில் நாம் செய்யும் சேட்டைகளில் ஒன்றான, சைக்கிளின் பின்புறம் திரும்பிப் பார்த்தவாறு ரங்கன் வாத்தியார் உட்கார்ந்திருப்பது போலவும் மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

 

 

இவை மட்டுமின்றி, புல்லட்டில் ரங்கன் வாத்தியாரை கபிலன் அழைத்துச் செல்வது, குதிரையில் இருவரும் சவாரி செய்வது மற்றும் பறக்கும் விமானத்தின் மேல் அமர்ந்து கொண்டு பயணிப்பதாகவும் மீம்ஸ்கள் உலா வரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் உச்சமாக, அவதார் திரைப்படத்தில் வரும் ராட்சத ட்ராகன் மேல் உட்கார்ந்து கொண்டு ரங்கன் வாத்தியாரை கபிலன் அழைத்துச்செல்வது போன்ற மீம்ஸ்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன..

ஒரு கட்டத்தில், “வாத்தியாரே… கன்னியாகுமரி வந்தாச்சு இறங்கு” என கபிலன் சொல்ல, “வண்டிய நேரா கோவாக்கு விடு கபிலா, உருகுதே பாடலில் நடித்த ப்ரியங்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என ரங்கன் வாத்தியார் சொல்வதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சென்னையின் பெருவெள்ளத்தை நினைவூட்டும் விதமாக இருவரும் படகில் பயணிப்பது போலவும், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமான மீம்ஸ்களும் இணையத்தை கலக்கி வருகின்றன. கொரோனா காலத்தில் தொற்று பரவுதலை தவிர்க்க, மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் மீம்தான் இதுவரை வந்தவைகளிலேயே டாப் ட்ரெண்டிங்.

இறுதியாக, கபிலனின் சைக்கிளில் இருந்து மாஸ்டர் விஜய்யின் சைக்கிளுக்கு மாறி, ரங்கன் வாத்தியார் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்க, கபிலனோ ஓவியர்கள் லியானர்டோ டாவின்சி, வான் கோ, மைக்கேல் ஏஞ்செலோ உள்ளிட்டவர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வருகிறார். சிலரின் கற்பனையில் உதித்த இந்த மீம்ஸ்கள் நெட்டிசன்களை உற்சாகப்படுத்துவதாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோயம்பேட்டில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: வியாபாரிகள் சங்கம்!

EZHILARASAN D

4 பெண்களுடன் திருமணம்; அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்

G SaravanaKumar

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

Arivazhagan Chinnasamy