தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அனல் பறந்த மது விற்பனை!

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளிக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அரசு மதுபானக்…

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளிக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அரசு மதுபானக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. நாளை மே தின விடுமுறை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டும், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகிய காரணத்தினால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முன்னரே டாஸ்மாக் கடைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையால் டாஸ்மாக் கடைகளில் தற்போது மது பாட்டில்களை வாங்க நேற்று மக்கள் குவிந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் வெற்றிக் கொண்டாட்டத்திற்காகவும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் முந்திச் சென்று அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.