முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

இடத்தகராறில் வீடு புகுந்து தாக்குதல்; கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்

இடத்தகராறு காரணமாக வீடு புகுந்து அண்டை வீட்டாரை கடப்பாரையால் தாக்கி, அரை நிர்வாணமாக மரத்தில் கட்டிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவர் வீட்டில் இருந்த போது வீட்டின் கதவை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. வீட்டின் அருகில் வசித்து வரும் பழனி என்பவரின் குடும்பத்தினர் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். இருவரது குடும்பத்திற்கும் இடையே நிலத்தின் பட்டா பெறுவது தொடர்பாக சிவராமன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என கூறி சரமாரியாக தாக்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வீட்டில் இருந்த சிவராமனை அந்த கும்பல் தர தரவென இழுத்து சென்று அரை நிர்வாணமாக்கி மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியது. இந்த கொடூர காட்சியை பார்த்த சிலர் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிவராமனை மீட்டனர். போலீஸ் விசாரணையில், சிவராமன் தரப்புக்கு சொந்தமான இடத்தை பழனி குடும்பத்தினர் தங்களுக்கு தர வேண்டும் என கூறி தாக்குதல் நடத்தியதும், நீதிமன்ற வழக்கு வாபஸ் பெற வேண்டும் என்று கூறி கொலைவெறி தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கச்சிராயபாளையம் போலீசார், தாக்குதல் நடத்திய பழனி குடும்பத்தை கைது செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருவதாக சிவராமன் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். காயமடைந்த சிவராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட காவல்துறை எஸ்பியிடம் சிவராமன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சந்திரசேகரின் கேசிபி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை!

Web Editor

ஐ.எம்.எஃபின் முதல் பெண் துணை நிர்வாக இயக்குநர் ஆனார் கீதா கோபிநாத்

Halley Karthik

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்: பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு

G SaravanaKumar