எட்டயபுரம் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதியதில் ஊர்க்காவல் படை காவலர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் கிராமத்தை
சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் செல்வக்குமார். 38 வயதான இவர் விளாத்திகுளம் பகுதியில் ஊர்காவல் படையில் பணியாற்றிய வந்தார்.
இந்நிலையில் இன்று செல்வக்குமார் தனது பைக்கில் அயன்வடமலாபுரம் கிராமத்தில் இருந்து வீரப்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது கோவில்பட்டியில் இருந்து முத்தலாபுரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் செல்வராஜ் வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பைக்கில் வந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் மூப்பன்பட்டியை சேர்ந்த லெட்சுமண பெருமாள் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த செல்வகுமாருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.







