வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தும் ரேடார் பழுது நீக்கம்-எம்.பி. மகிழ்ச்சி!

சென்னையில் செயல்படாமல் இருந்த ரேடார் பழுது நீக்கம் செய்யப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சென்னையில்…

சென்னையில் செயல்படாமல் இருந்த ரேடார் பழுது நீக்கம் செய்யப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சென்னையில் செயல்படாமல் இருந்த ரேடார் பழுது நீக்கம் செய்யப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி.

இதனை விரைவாக சரி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன்.
பருவமழைக் காலம் வரவுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னறிவுப்புகளைக் கேட்டு விழிப்புணர்வோடிருப்போம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றையும் அவர் பதிவேற்றியுள்ளார்.

அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய வானிலை துறையால் சென்னை துறைமுகத்தில் எஸ்-பேண்ட் வகை டாப்ளர் ரேடார் இயக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த ரேடார் 2002 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் டாப்ளர் ரேடார் ஆகும்.

கடந்த 20 ஆண்டுகள் இயங்கி வந்த நிலையில் ஆன்டென்னா சார்ந்த இயந்திர பாகம் தேய்மானம் அடைந்ததால் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. கால போக்கில் ஏற்பட்ட தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக பாதிப்படைந்த பாகத்திற்கான மாற்று பாகம் கிடைக்கவில்லை. மேலும் கோவிட் காரணமாகவும் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்திய அரசு புவி அமைச்சகம் இந்திய வானிலை துறை மற்றும் இந்திய விண்வெளி கழகம் இணைந்து மேற்கொணஅட தொடர் நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டிலேயே புதிய பாகம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. புதிய பாகம் பொருததப்பட்டு இந்த ரேடார் மீண்டும் முழு பயன்பாட்டுக்காக இயங்க துவங்கியுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.