தமிழ்நாடு வானிலை மையம் இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு!

தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியிருப்பதாவது, “சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிப்பெயர்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.