இமாச்சலப் பிரதேசத்தில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக
உயர்ந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது.
இதையடுத்து அங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள
கின்னார் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இரு தினங்களுக்கு முன் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, லாரி, கார்கள் என பல
வாகனங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையினர்,
இந்தோ -திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர், உள்ளூர் போலீசார் மீட்பு
பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வாடகைக்காரில் பயணம் செய்து, மண்ணில் புதைந்த 8 பேரின் உடல்கள்
மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு நடந்து வந்தது. பேருந்தில் இருந்த 40 பேர் உயிரோடு
புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் சில சடலங்கள் நேற்று
மீட்கப்பட்டன. இன்றும் சில உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின்
எண்ணிக் கை 23 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.








