“திமுகவுக்கு காங்கிரஸ் துணைநிற்கும்” – விஜய் வசந்த் எம்.பி

வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் திமுக அரசுக்கு காங்கிரஸ் துணைநிற்கும் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தேயக பேட்டியளித்த அவர், “மாவட்ட மக்களுக்கு என்ன…

வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் திமுக அரசுக்கு காங்கிரஸ் துணைநிற்கும் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தேயக பேட்டியளித்த அவர், “மாவட்ட மக்களுக்கு என்ன தேவையோ அதை ஒவ்வொரு மத்திய, மாநில அரசு அமைச்சர்களுக்கும் கோரிக்கையாக வைத்து வருகிறேன். மீனவர்களை பாதிப்பிற்குள்ளாகும் மீன்வள மசோதாவை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளேன்.”

“குமரியில் பழுதடைந்த சாலைகள் விரைவில் செப்பனிடப்படும். 100 நாட்களில் நல்லாட்சியை தந்துள்ளது தமிழக அரசு. கொரோனா தடுப்பு, மக்களுக்கான திட்டங்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், என திமுகவின் பணி சிறக்க வாழ்த்துகள். திமுகவுக்கு துணையாக காங்கிரஸ் இருக்கும்.”

“நீதிமன்றம் மூலம் ஷமிகா பர்வீனுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடர்பாக பெடரேஷன் வெளிப்படை தன்மையாக இல்லாததே இவ்வளவு குழப்பம். இதனால் விளையாட்டு துறைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.” என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.