முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!

கடந்த வாரம் நடந்த பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்.

கடந்த வாரம் நடைப்பெற்ற பாலியல் வன்புணர்வு வழக்கு தொடர்பான கருத்துக்கள் முற்றிலும் தவறாக வெளியிடப்பட்டதாகவும், நாங்கள் பெண்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம் என்றும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு குற்றவாளியை திருமணம் செய்து கொள்ளலாமா என்று நாங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அது முற்றிலும் தவறு, நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டோம். நாங்கள் அவரை திருமணம் செய்து கொள்ள உத்தரவிடவில்லை.” என கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சாரதுறையில் பணியாற்றுபவர் மோஹித் சுபாஷ் சவான். இவர் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மோஹித், கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எ. பாப்டேவின் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாலசுப்ரமணியன், போபண்ணா அமர்வின் கீழ் இரு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவரிடம், “பாதிக்கப்பட்ட பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா? எனக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதிபதிகள் எழுப்பிய இக்கேள்வி கடும் சர்ச்சையை எழுப்பியது. .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பெண்ணிய அமைப்புகள், பெண்ணியவாதிகள் நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தலைமை நீதிபதி மன்னிப்பு கோர வேண்டும் எனப் பெண் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா உச்சநீதிமன்றத்தை ஆதரித்து, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய ஆர்வலர்களை, மிக உயர்ந்த நீதித்துறையை “அவதூறு” செய்யக்கூடாது என்றும், நீதித்துறையையும், நீதிபதிகளையும் அரசியல் லாபத்துக்காக அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேறொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

14 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் வயிற்றில் வளரும் 26 வார சிசுவைக் கலைக்க அனுமதி கோரிய இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று காணொலியில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உலக மகளிர் தினமான இன்று, “பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவரிடம்” கடந்த வாரம் கேட்ட கேள்வி தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் (சிறுமி) வழக்கறிஞர் வி.வி.பிஜூ ஆஜரானார். அவர் வாதிடுகையில், “சில குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள், நீதித்துறையை அவமானப்படுத்த முயல்கிறார்கள். இதைக் கையாள தனியாகச் செயல்முறை அவசியம்” எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், “எங்கள் முன் வந்த எந்த பலாத்கார வழக்கு என்று எங்களுக்கு நினைவில்லை. நான் என்னுடைய சகோதரர்களிடம் (சக நீதிபதிகள்) கேட்டேன். அவர்களுக்கும் நினைவில்லை. ஆனால், நாங்கள் பெண்கள் மீது மிகவும் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளோம். நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு எப்போதும், பார் கவுன்சில் கையிலும் வழக்கறிஞர்கள் கையிலும் இருக்கிறது. பலாத்காரம் செய்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா எனப் பாலியல் பலாத்காரக் குற்றம் சாட்டப்பட்டவரிடம் நாங்கள் கேட்கவில்லை.

நாங்கள் கேட்டது, “நீங்கள் திருமணம் செய்யப் போகிறீர்களா” என்றுதான் கேட்டோம். திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்கவில்லை. எங்களின் வார்த்தை முற்றிலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” என விளக்கமளித்துள்ளார்.

Advertisement:

Related posts

மதுரை எய்ம்ஸ்: இந்தியா-ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

Gayathri Venkatesan

புதுவையில் தனித்து போட்டியிடும் பாமக!

Karthick

சென்னை புறநகர் ரயில் சேவை அதிகரிப்பு!

Karthick