நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சா்ச் நகரில் இன்று நடைபெற்றி வருகிறது.
முதலில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
அணி விவரம்:
இந்திய அணி : சஞ்சு சாம்சன்(wk), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்(c), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்
நியூசிலாந்து அணி : ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட்(wk), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி இன்று ஆடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.




