முக்கியச் செய்திகள் இந்தியா

கூண்டோடு பாஜகவில் இணைந்த திரிணாமூல் எம்.எல்.ஏக்கள்!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மார்ச் இறுதியில் தொடங்கி 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி பாஜகவில் இணைந்தனர்.

இந்த சம்பவத்தின் உச்சமாக, திரிணாமூல் அமைச்சரான சுவெந்து அதிகாரி மமதாவுக்கு தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுமாறு சவால் விடுத்திருந்தார். இந்த, சவாலை ஏற்று மமதாவும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில், இன்று சோனாலி குஹா, திபெண்டு பிஸ்வாஸ், ரவீந்திரநாத் பட்டாச்சார்யா, ஜட்டு லஹிரி ஆகிய திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் திரிணாமூல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் அம்மாநில அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சமீபத்தில் திணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி நாடாளுமன்றத்தில் திடீரென தனது ராஜினாமாவை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இரு சில தினங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

“மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன்”: செல்லூர் ராஜூ

Karthick

லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

Gayathri Venkatesan

20 ரூபாய் டோக்கனை நம்பி ஏமாற வேண்டாம்: கோகுல இந்திரா

Niruban Chakkaaravarthi