கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்…

கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண தொகை, 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகைப் பொருட்கள் ஆகிய கொரோனா நிவாரணப் பொருட்கள் அரசு சார்பில் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 262 கோயில்களில் பணியாற்றும் 262 அர்ச்சகர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோயில் பணியாளர்களுக்கு வழங்கினார். இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் ரொக்கமும் 2,620 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.