மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த…

டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மது அருந்துபவர்களால் அவர்களது குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதாகவும், மது விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு காவல்துறையினர் உரிய உரிமம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மதுபான கடைகளில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மதுபான கடை விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.