10ந்தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

வரும் 10ந்தேதி சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 9ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர்…

வரும் 10ந்தேதி சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 9ந்தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில் வரும் 10ந்தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டம், 10-01-2023 செவ்வாய்கிழமை அன்று காலை 11.00 மணி அளவில் சென்னையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கோவி.செழியன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.