‘அண்ணாத்த’ படத்தை இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை

ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங் களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில்…

ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங் களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, வேலராமமூர்த்தி, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ரஜினி, ஊராட்சித் தலைவராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இணையதள நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதில் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சட்டவிரோதமாக இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.