கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவர் இவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித்,…

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவர் இவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த புனித், ’பெட்டாடா ஹூவு’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். பின்னர் புரி ஜெகநாத் இயக்கிய ’அப்பு’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தமிழில் ‘தம்’ என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற புனித் ராஜ்குமார், இப்போது ‘ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் அவர் நடித்துள்ள த்வித்வா என்ற படமும்ம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் சகோதரரும் நடிகருமான சிவராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

புனித் ராஜ்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கன்னட ரசிகர் களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப் பதாக, சமூக வலைதளங்களில் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.